Monday, 22 July 2013

சகுனம் பார்த்து சகுனம் பார்த்து சந்தியில போனோம்

காக்கை குஞ்சு பொரித்து இருந்தாலோ , இறந்து விட்டாலோ அந்த வழியில் வருவோரின் தலையில் வந்து அடிக்கும் பெரும்பாலும் கிராம புறங்களில் இருந்து வந்த பலர் க்கு தெரியும். நான் இவ்வாறு அனுபவ பட்டிருக்கிறேன் .

இந்த அற்ப விசயம் கூட தெரியமால் , பெங்களூரில் தலையில் காகம் கொத்தியதால் சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஜோதிடர் ஒருவரிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், சனி பகவான் பிடிக்க விரட்டுவதாகவும், சனி பிடித்தால் விடாது, ஏழரை ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் ஏற்படும் என்றும், அவரது தாய் தந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று பயமுறுத்தியுள்ளார். இதனால் வருத்தமடைந்த ஆனந்த், இந்த தகவலை தனது தாய்க்கு போனில் தெரிவித்துள்ளார். ஜோதிடர் சொல்வது போல ஒன்றும் நடக்காது தைரியமாக இரு என்று அவரது தாயார் ஆறுதல் கூறினார். ஆனாலும் சமாதானம் அடையால் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சகுனம் பார்த்து சகுனம் பார்த்து சந்தியில போனோம் ... பாம்பை கண்டோம் அலறுறோம் ..பள்ளியும் கத்துனா பதருறோம்

படிப்பும் ,அறிவுக்கும் சம்பந்தம் இல்ல ...படிச்சவன் பல பேருக்கு பகுத்தறிவில்ல ...

No comments:

Post a Comment